Homeசெய்திகள்சினிமாஅனிமல் படத்திற்கு தொடர்ந்து எழும் எதிர்ப்பு

அனிமல் படத்திற்கு தொடர்ந்து எழும் எதிர்ப்பு

-

அனிமல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் கலக்கி வந்தாலும், இப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சந்தீப் கெட்டி வங்கா. இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சந்தீப் ரெட்டி. இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி இந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இந்தியில் சந்தீப் ரெட்டியே இப்படத்தை இயக்கினார்.

அண்மையில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இதில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். பான் இந்தியா ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியுள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனில் கபூர் மற்றும் ரன்பீர் கபூர் தந்தை – மகனாக நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. வசூலில் சுமார், 800 கோடியை தாண்டி 1000 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.

இருப்பினும், அனிமல் படத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், திரைப்பட விழாவில் பேசிய புகழ்பெற்ற கதாசிரியர் ஜாவெத், ஒரு திரைப்படத்தில் பெண்ணை அறைவது தவறில்லை என கூறி படம் வெற்றிபெற்றதால் அது மிகவும் ஆபத்தானது. எந்த படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கு ரசிகர்கள் தான் பொறுப்பு என அனிமல் படத்தை சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அனிமல் படக்குழு, நீண்ட அனுபவம் கொண்ட உங்களுக்கு ஒரு படத்தில் ஏமாற்றப்பட்ட காதலனின் மன உணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், உங்கள் கலைப்படைப்பு அனைத்தும் பொய்யானவை என குறிப்பிடப்பட்டது.

MUST READ