இசையமைப்பாளர் அனிருத், விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் குறித்து சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மங்காத்தா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாகும். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் நேற்று (டிசம்பர் 25) கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
#Sawadeeka sawadeeka.. trip-ah tripping ka.. trip-ah tripping ka..
Sawadeeka sawadeeka.. yakka kapunkaa.. yakka kapunkaa 🕺💃#Vidaamuyarchi single from 1pm tomo 🎉🎉🎉AK sir ⚡️⚡️⚡️ #MagizhThirumeni 🤗🤗🤗
🎤 ‘Folk Marley’ @anthonydaasan
🖋️ @Arivubeing— Anirudh Ravichander (@anirudhofficial) December 26, 2024
அதன்படி SAWADEEKA எனும் பாடல் நாளை (டிசம்பர் 27) மதியம் 1 மணி அளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்த பாடல் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி இந்த பாடலில்
“Sawadeeka Sawadeeka… Trip-ah Tripping ka…Trip-ah Tripping ka.. Sawadeeka Sawadeeka…. Yakka Kapunkaa…. Yakka Kapunkaa” என்ற வரிகள் இடம்பெறும் என
தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ள நிலையில் அறிவு இந்த பாடல்வரிகளை எழுதியுள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளார் அனிருத். இனிவரும் நாட்களில் இந்த லிரிக்ஸ் இணையத்தில் ட்ரெண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.