தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அந்த வகையில் இவர் ஏகப்பட்ட வெற்றி படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளையும் அள்ளி இருக்கிறார். அதிலும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்காக இவர் போட்டிருந்த இசை இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதன்படி பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் அனிருத். இந்நிலையில் இவர், தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக கமிட் ஆகி இருக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் அனிருத் இசை அமைக்க போகிறாராம். ஏற்கனவே தனுஷின் 3, வேலையில்லா பட்டதாரி, தங்க மகன் ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அனிருத், சிம்புவின் 49வது படத்திற்கும் 51 வது படத்திற்கும் இசையமைக்க மறுத்துவிட்டாராம். தற்போது அனிருத் பல படங்களில் கமிட் ஆகியிருப்பதாலும் இசைக்கச்சேரி போன்றவைகளில் பிஸியாக இருப்பதாலும் சிம்பு படங்களுக்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் தனுஷ் படத்திற்கு மட்டும் அனிருத் எப்படி ஓகே சொன்னார்? அப்போது மட்டும் அவர் பிஸியாக இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.