Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' தீம் மியூசிக் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு வைரல்!

‘விடாமுயற்சி’ தீம் மியூசிக் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு வைரல்!

-

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 வது படமாகும். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.'விடாமுயற்சி' தீம் மியூசிக் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு வைரல்! இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். அஜித்தின் துணிவு படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்தை மீண்டும் திரையில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதன்படி விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நேற்று (நவம்பர் 28) இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. எதிர்பாராத விதமாக வெளியான இந்த டீசரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதேசமயம் டீசரில் இடம் பெற்ற தீம் மியூசிக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விடாமுயற்சி படத்தின் தீம் மியூசிக் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விடாமுயற்சி தீம் மியூசிக்கில் வரும் இறுதி பகுதியை திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கொண்டாடுவதை காண காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இதன் மூலம் விடாமுயற்சி படத்தில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ