Homeசெய்திகள்சினிமாஅஞ்சலி நடிக்கும் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி... டீசர் வெளியீடு...

அஞ்சலி நடிக்கும் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி… டீசர் வெளியீடு…

-

- Advertisement -
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை அஞ்சலி. ராம் இயக்கி கற்றது தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகியவர் நடிகை அஞ்சலி. அடுத்து, வசந்த பாலன் இயக்கி வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், நடிகை அஞ்சலியை முன்னணி நடிகையாகவும் கோலிவுட் திரையுலகில் உயர்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு எங்கேயும் எப்போதும்,அஜித் நடித்த மங்காத்தா, ஆகிய பட படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

அவரது நடிப்பில் மாறுபட்ட திரைப்படம் இறைவி. அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும், இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் ஒரு காலக்கட்டத்தில் வெளியாகின. பிறகு ஜெய்யை பிரேக்அப் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க அஞ்சலி ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது ராம் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். ஏழு மலை ஏழு கடல் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் அஞ்சலி நடித்திருக்கும் புதிய திரைப்படம் கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி. இத்திரைப்படம் கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதில் அஞ்சலியுடன் சீனவாஸ் ரெட்டி, சத்யா, பிரம்மாஜி, ரவிசங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சிவா துர்லபதி இயக்கி இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ