19 வயதில் பாலியல் தொல்லை… பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு…
- Advertisement -
தனது 19 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபல பிக்பாஸ் நடிகை அங்கீதா தெரிவித்துள்ளார்.
கோலிவுட், மோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என அனைத்து திரை உலகிலும் முன்னணி நடிகைகளாக பலரும் வலம் வருகின்றனர். இருப்பினும், அனைத்து திரை உலகிலும், நடிகைகள் நாள்தோறும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் நேரத்தில பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். அதில் முக்கியமான ஒன்று பாலியல் தொல்லை. இந்த செய்தி நாள்தோறும்திரை உலகில் கேட்கப்படும் செய்தி ஆகும். அந்த வகையில், பிரபல பிக்பாஸ் நடிகை அங்கீதா, தனது 17 வயதிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அவர் மனம் தெரிந்து பேசியுள்ளார்.
இவர், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி எனவும் கூறப்பட்டார். ஒரு திரைப்படத்திற்கு 19 வயதில் நாயகி தேவை என்று கேள்விப்பட்டபோது, ஆடிசன் சென்றிருந்தாராம். அப்போது, அவரை தனியாக அழைத்த நபர் ஒருவர், நீங்கள் தான் படத்தின் நாயகி, அதிக சம்பளம் கொடுப்போம், ஆனால், கொஞ்சம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். 19 வயதில் பெண்ணிடம் இப்படி கேட்பது, அசிங்கமாக இல்லையா என்று கேட்டேன், அவர் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார் எனவும் அங்கீதா தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, அவர் பல சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். மேலும், பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். இதனிடையே, அவர் மறைந்த நடிகர் சுசாந்த்சிங்கின் காதலி என்றும் கிசுகிசுக்கப்பட்டார். கங்கனா ரணாவத் நடித்த மணிகர்ணிகா என்றபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்