Homeசெய்திகள்சினிமா'டிமான்ட்டி காலனி 2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

-

டிமான்ட்டி காலனி 2 படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.'டிமான்ட்டி காலனி 2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!

அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி இருந்த திரைப்படம் தான் டிமான்ட்டி காலனி. ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து அஜய் ஞானமுத்து, டிமான்ட்டி காலனி 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி சௌந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து ட்ரெய்லரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ரிலீஸ் ட்ரெய்லரையும் படக்குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி விட்டனர். 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு!மேலும் ஏற்கனவே படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்தில் நொடிகளே எனும் இரண்டாவது பாடல் நாளை (ஆகஸ்ட் 1) மாலை 5.01 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ