Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்.... புதிய போஸ்டர் வெளியீடு!

‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்…. புதிய போஸ்டர் வெளியீடு!

-

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. 'விடாமுயற்சி' படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்.... புதிய போஸ்டர் வெளியீடு!இந்த படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனியை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. மேலும் ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அதே சமயம் அஜித், குட் பேட் அக்லி திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பும் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம்  விடாமுயற்சி படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர்களின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்நிலையில் நடிகர் நிகில் நாயர் போஸ்டரை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

MUST READ