யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து நடிகர் யாஷ் எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதன்படி இவர், பிரபல நடிகையின் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படம் யாஷின் 19ஆவது படமாகும். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் உனது போதை பொருள் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கர்நாடகா போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிகை நயன்தாரா யாஷுக்கு அக்காவாக நடிப்பதற்கு ஒப்பந்தமான நிலையில் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார்.
அடுத்ததாக நடிகை கியாரா அத்வானி இதில் யாஷுக்கு ஜோடியாக நடிப்பதாகவும், இந்த படத்தில் வில்லியாக ஹூமா குரேஷி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை தாரா சுத்தாரியா மற்றுமொரு கதாநாயகியாக இணைந்துள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.