Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான அனுபமா.... போஸ்டருடன் அறிவித்த 'டிராகன்' படக்குழு!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான அனுபமா…. போஸ்டருடன் அறிவித்த ‘டிராகன்’ படக்குழு!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் டிராகன் படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான அனுபமா.... போஸ்டருடன் அறிவித்த 'டிராகன்' படக்குழு!

கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் ஓ மை கடவுளே எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த படத்திற்காக இவர் பலராலும் பாராட்டப்பட்டார். எனவே அடுத்ததாக இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான அனுபமா.... போஸ்டருடன் அறிவித்த 'டிராகன்' படக்குழு!அதன்படி அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டது. அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசை அமைக்கிறார். பிரதீப் ராகவ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே இரண்டு போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மூன்றாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் காண்பிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த போஸ்டரின் அனுபமா பரமேஸ்வரன், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தது அனுபமா இந்த படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ