நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வர தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுபமா.
அதைத்தொடர்ந்து தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் பைசன் படத்திலும் நடிக்க உள்ளார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் லாக்டவுன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஏ ஆர் ஜீவா இயக்கியுள்ளார். என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
கே ஏ சக்திவேல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்ற அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -