Homeசெய்திகள்சினிமாவாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.... 'சைரன்' பட கதை இதுவா?

வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்…. ‘சைரன்’ பட கதை இதுவா?

-

- Advertisement -

வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.... 'சைரன்' பட கதை இதுவா?ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கி உள்ள படம் சைரன். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு சைரன் 108 என்று மாற்றப்பட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.... 'சைரன்' பட கதை இதுவா? அந்த வகையில் இந்த படம் ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படம் சம்பந்தமான புதிய அப்டேட்டுகள் கிடைத்துள்ளன. அதன்படி இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் ஜெயம் ரவிக்கு மனைவியாக நடித்துள்ளாராம்.வாய் பேச முடியாதவராக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்.... 'சைரன்' பட கதை இதுவா?

அதாவது வாய் பேச முடியாத மனைவியாக அனுபவ பரமேஸ்வரன் நடித்துள்ளதாகவும், ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இறந்து விடுவதாகவும் அதற்காக ஜெயம் ரவி பழி வாங்குவது தான் படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ