Homeசெய்திகள்சினிமாசந்தீப் ரெட்டியை தவறாக புரிந்து கொண்டீர்கள் - அனுராக் காஷ்யப்

சந்தீப் ரெட்டியை தவறாக புரிந்து கொண்டீர்கள் – அனுராக் காஷ்யப்

-

- Advertisement -
பெரிய அறிமுகமின்றி திரைக்கு வந்து இன்று தெலுங்கு திரையுலகில் முக்கிய அடையாளமாக மாறி இருப்பவர் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. மேலும், விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராகவும் உயர்த்தியது. இத்திரைப்படம் தமிழ் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருப்பார். இந்தியில் இப்படத்தை சந்தீப் ரெட்டியே இயக்கினார்.

தற்போது சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். ப்ரீதம், விஷால் மிஸ்ரா, ஆஷிம் கெம்சன் ஆகியோர் படத்திற்கு இசை அமைத்துள்ளனர். டி சீரிஸ், சினி ஒன் நிறுவனங்கள் படத்தை தயாரித்தன. அப்பா மகன் உறவை பேசும் இத்திரைப்படம் வெளியான நாள் முதலே கலவையான விமர்சனங்களை பெற்றன. வசூலை குவித்தாலும் அனிமல் படம் சமூகத்திற்கு கெடுதல் என்றும், அப்படத்திற்கு தடை விதிக்கக் கோரியும் பல விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.

அதே சமயம் சிலர் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கும், அனிமல் படத்திற்கும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவமதிக்கப்பட்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி என ஆறுதல் தெரிவித்துள்ளார். மிகவும் நேர்மையான மற்றும் நல்ல மனிதர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அனிமல் திரைப்படத்தையும் அவர் பாராட்டி உள்ளார்.

MUST READ