நடிகை அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் விரைவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அனுஷ்கா நடிப்பில் உருவான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியானது. இதில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முரளி சர்மா ஜெயசுதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மகேஷ்பாபு இதனை இயக்கியிருந்தார். நீரவ் ஷா ஒளிப்பதிவிலும் ரதன் இதற்கு இசையிலும் உருவானது.
காமெடி கலந்த காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வருகின்ற அக்டோபர் 5ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக தெரிகிறது. இதன்மூலம், மலையாள திரையுலகிலும் அனுஷ்கா வலம் வர உள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.