Homeசெய்திகள்சினிமாநடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும்டும்டும்... கன்னடத்திலிருந்து மாப்பிள்ளை... நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும்டும்டும்… கன்னடத்திலிருந்து மாப்பிள்ளை…
- Advertisement -
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியான அருந்ததி திரைப்படம், அனுஷ்காவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, ரஜினி, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர, வரலாற்று திரைப்படங்கள் என்றாலே அதில் அனுஷ்கா தான் நிச்சயமாக கதாநாயகியாக இருப்பார்.
அனுஷ்கா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. இதில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பொலி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முரளி சர்மா ஜெயசுதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மகேஷ்பாபு இதனை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மலையாளத்தில் ரோஜின் தாமஸ் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.