தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ள இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு வெளியான பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் அமலா பால் இந்த படத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தனுஷ் தனது முந்தைய படங்களில் மலையாள நடிகைகளான நயன்தாரா, அமலா பால், பார்வதி, மடோனா செபாஸ்டியன், சம்யுக்தா உள்ளிட்டோருடன் இணைந்து யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, மரியான், பா பாண்டி, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்தப் படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்த காரணத்தால் தற்போது அந்த வரிசையில் தனது 50வது படத்தில் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளியை நடிக்க வைக்க இருப்பதாகவும் அதன் மூலம் தனது வெற்றி பயணத்தை தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.