நடிகர் அஜித்தின் பிறந்தநாள் நேற்று மே 1-ம் தேதி வெகு விமரிசையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். ரத்த தான முகாமும் நடத்தினர். இதுமட்டுமன்றி அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி அவரது நடிப்பில் மெகா ஹிட் அடித்த கிளாசிக் படங்களான தீனா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இதனால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. ஏற்கனவே விஜய் நடிப்பில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தன.
இந்த சமயத்தில் அஜித்தின் தீனா மற்றும் மங்காத்தா, படங்களும் ரீ ரிலிஸ் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் விஜய்யின் கில்லி பட போஸ்டர் வெளியே வைக்கப்பட்டிருந்தது. தீனா படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர், அந்த பேனரை கிழித்தெறிந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து விஜய் பேனரை கிழித்த நபர் மீது காவல்நிலையத்தில் தியேட்டர் நிர்வாகம் புகார் அளித்தது.
Apologize video from the person who tore #Ghilli Banner at Kasi Theatre.
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 1, 2024