“ஜனவரி 1ஆம் தேதி நமக்கு புத்தாண்டு கிடையாது, சித்திரை 1 தான் நமக்கு உண்மையான புத்தாண்டு” என்று நடிகை நமீதா பேசியுள்ளார்.
நடிகை நமீதா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்து வந்தார். தற்போது சினிமாவில் அதிகம் தென்படாமல் இருந்து வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நமீதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “புத்தாண்டு என்பது சித்திரை 1-ம் தேதி மட்டுமே. ஜனவரி 1 கிடையாது” என்று பேசி உள்ளார்.
“பெருமைமிக்க பாரத நாட்டில் வாழ்கின்ற மிகத் தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது வரும் ஏப்ரல் 14ஆம் தேதி. வருகின்ற சித்திரை 1-ஆம் தேதி மட்டுமே. நிச்சயமாக ஜனவரி 1 கிடையாது. ஆங்கில புத்தாண்டு என்பது நமது கலாச்சாரமே கிடையாது. அனைவருக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram