Homeசெய்திகள்சினிமாஇந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்தும்....'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!

இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்தும்….’மதராஸி’ குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!

-

- Advertisement -

மதராஸி படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி அளித்துள்ளார்.இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்தும்....'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!

ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் திரைப்படத்தையும், சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கி வரும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தபடியாக இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும்? என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்தும்....'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி!இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், மதராஸி படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை படமாக இன்னும் 12 நாட்கள் மட்டும் மீதம் இருக்கின்றன. ஏற்கனவே நாங்கள் சில காட்சிகளை எடிட் செய்து விட்டோம். மீதமுள்ள படப்பிடிப்புகளை முடித்த பின்னர் பின்னணி இசைக்கான வேலைகள் தொடங்கப்படும். இந்த படம் ஒரு கமர்சியல் படமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திப்படுத்தும். மேலும் பாராட்டுகளையும் பெறும்” என்றார்.

MUST READ