சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் SK23 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வித்யூத் ஜம்வால், ருக்மினி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் ஒன்று போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏ ஆர் முருகதாஸ், SK23 படத்திற்குப் பிறகு சல்மான் கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். எனவே SK23 படத்தை நான்கு மாதங்களுக்குள் முடித்துவிட்டு சல்மான் கான் படத்தை தொடங்க இருக்கிறார். ஆதலால் சிவகார்த்திகேயனிடம் இந்த படத்தை முடித்துவிட்டு அமரன் படப்பிடிப்பில் இணையுமாறு ஸ்ட்ரிட்டாக சொல்லிவிட்டாராம். ஏ ஆர் முருகதாஸ் போட்ட இந்த கண்டிஷனுக்கு சிவகார்த்திகேயனும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.