‘தர்பார்’ படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகளாக ஏஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகவில்லை.
அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் உடன் முருகதாஸ் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் என்டர்டெய்னராக இருக்கும் என்றும், படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் ஏஆர் முருகதாஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஆம், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்க உள்ளேன். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சரவெடியான காம்போ ஆன் தி வே மக்கா!