Homeசெய்திகள்சினிமாஇது கஜினி மாதிரியான படம்.... 'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ்!

இது கஜினி மாதிரியான படம்…. ‘மதராஸி’ குறித்து ஏ.ஆர். முருகதாஸ்!

-

- Advertisement -

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி படம் குறித்து பேசி உள்ளார்.இது கஜினி மாதிரியான படம்.... 'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ்!

சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகும் திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து விக்ராந்த், விதயூத் ஜாம்வால் டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இது கஜினி மாதிரியான படம்.... 'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ்! ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி படத்தின் படப்பிடிப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக இந்த படத்தினை இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்க கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வேறொரு பரிமாணத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இது கஜினி மாதிரியான படம்.... 'மதராஸி' குறித்து ஏ.ஆர். முருகதாஸ்!ஆகையினால் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஸ்டைலில் சிவகார்த்திகேயனை எப்படி காட்டுவார் என்பதை காண ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், “இந்த படம் கஜினி மாதிரியான படம். இதிலும் கஜினி படத்தை போல் இருண்ட பக்கத்துடன் அதிகமான காதல் கதை இருக்கும். இன்னும் 22 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் நடுவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ