நடிகர் அஜித்துக்கு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய 53வது பிறந்த நாளை இன்று (மே 1)கொண்டாடி வருகிறார். இந்நாளை ரசிகர்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் பலரும் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“Wishing a very Happy Birthday to the one and only Ajith sir! 🎉. Here’s to your continued greatness and inspiring journey! #HappyBirthdayAK
— A.R.Murugadoss (@ARMurugadoss) May 1, 2024
அந்த வகையில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், ” தி ஒன் அண்ட் ஒன்லி அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் மகத்துவம் மற்றும் ஊக்கமளிக்கும் பயணம் தொடரட்டும்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த வெளியான தீனா திரைப்படம் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மங்காத்தா, பில்லா போன்ற படங்களும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.