Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!

-

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்! அதைத் தொடர்ந்து விஜயகாந்த் நடிப்பில் ரமணா திரைப்படத்தை இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். பின்னர் தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் இவர் இயக்கிய கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி போன்றவை இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. கடைசியாக இவர் ரஜினி நடிப்பில் இயக்கியிருந்த தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் SK23 படத்தை இயக்கி வருகிறார் ஏ ஆர் முருகதாஸ்.பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்! ஏ ஆர் முருகதாஸின் படங்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களாக இந்திய அளவில் ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் SK23 படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்தியில் கஜினி திரைப்படத்தை ரீமேக் செய்தார். இதன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். தற்போது சல்மான் கான், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இரண்டாவது முறையாக புதிய படத்திற்காக இணைந்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ள நிலையில் படத்தினை 2025 ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருக்கிறாராம். எனவே இந்த படமும் ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களை போல் இந்திய அளவில் வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

MUST READ