Homeசெய்திகள்சினிமா'வடிவேலுவை பார்த்து தான் எனக்கு அந்த ஐடியா வந்தது'........ 'மாமன்னன்' வெற்றி விழாவில் ஏ ஆர் ரகுமான்!

‘வடிவேலுவை பார்த்து தான் எனக்கு அந்த ஐடியா வந்தது’…….. ‘மாமன்னன்’ வெற்றி விழாவில் ஏ ஆர் ரகுமான்!

-

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன். கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், ரவீனா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க, தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்து சொல்ல வேண்டிய சொல்வதற்கு சற்று சிக்கலான கருத்துக்களை மாரி செல்வராஜ் ஸ்டைலில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்ட படம் தான் மாமன்னன். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 27 இல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இப்படம் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்தது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் 50 ஆம் நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் சென்னையில் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் ஏ ஆர் ரகுமான், “மாமன்னன் படத்தின் கதையானது 20, 30 வருடங்களாக எனக்குள் இருந்த ஆதங்கம். ஏன் இப்படி நடக்கிறது என்று பல நாள் எனக்கு ஆதங்கம் இருந்தது. ஆனால் இசை மூலமாக என்னால் எதையும் செய்ய முடியவில்லை. இந்த மாதிரி படத்தை யார் இயக்குகிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன். மாரி செல்வராஜ் படத்தின் கதையை கூறும் போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  மாமன்னன் படம் இவ்வளவு நன்றாக வரும் என்று எனக்கு தெரியாது. படம் இந்தளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் வடிவேலு தான். படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் உதயநிதி பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போது அவர்  பின்னால் வடிவேலு அமர்ந்து வருவார். அந்தக் காட்சியில் வடிவேலு அழுவது போன்று இருப்பார். அதை பார்த்த பிறகு தான் வடிவேலுவை வைத்து ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என்ற ஐடியா எனக்கு வந்தது. படத்தில் அனைவருமே நன்றாக நடித்திருந்தார்கள் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பேசியுள்ளார்.

MUST READ