Homeசெய்திகள்சினிமாமறைந்த பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர்பெறச் செய்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்!

மறைந்த பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர்பெறச் செய்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்!

-

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், மறைந்த இரு பிரபல பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர் பெற செய்துள்ளார்.

மறைந்த பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர்பெறச் செய்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்!ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் இசை புயல் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் உருவாகியுள்ளது. சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விக்ராந்த், ஏ ஆர் ரகுமான், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு இடையில் படத்தின் டீசர் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நேற்று, திமிறி எழுடா எனும் மூன்றாவது பாடல் வெளியானது.மறைந்த பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர்பெறச் செய்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்!

இந்தப் பாடலில் ஓராண்டுக்கு முன்பாகவே உயிரிழந்த பாம்பா பாக்யா மற்றும் 27 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த சாகுல் ஹமீது ஆகியோரின் குரலை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்டுருவாக்கம் செய்து அசத்தியுள்ளார் ஏ ஆர் ரகுமான். இந்தப் பாடலுக்கு அவர்கள் இருவரின் குரல் தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் தொழில்நுட்ப உதவியால் அவர்கள் இருவரையும் உயிர் பெயர் செய்துள்ளார் ஏ.ஆர். ரகுமான். இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

MUST READ