இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ ஆர் ரகுமான். இவர் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். கடந்து சில தினங்களுக்கு முன்பாக வெளியான அயலான் மற்றும் லால் சலாம் பிட்டு படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதை தொடர்ந்து தனுஷின் ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார் . மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஹஸ்ரத் சையத் மூசா காதிரி தர்காவிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார் ஏ ஆர் ரகுமான். அதாவது, ஹஸ்ரத் சையத் மூசா காதிரி தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவிற்காக ஆடி காரில் சென்ற ஏ ஆர் ரகுமான், தனது பிரார்த்தனையை முடித்துவிட்டு திரும்பும் வேளையில் ரசிகர்கள் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் கிளம்பி சென்றுள்ளார் ஏ ஆர் ரகுமான். இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நாகூர் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவிற்கும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆட்டோவில் தான் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.