சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சுந்தர் சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை குஷ்பூ மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்களைப் போல் இந்த படமும் ஹாரர் கலந்த காமெடி கதை களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தை கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அதன்படி இப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர் விஷால், இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாகவே படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரு கமர்சியல் இயக்குனர்களும் ஒரே நாளில் மோத இருக்கின்றனர் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.