Homeசெய்திகள்சினிமாபேய் வசூல் செய்யும் 'அரண்மனை 4'!

பேய் வசூல் செய்யும் ‘அரண்மனை 4’!

-

சுந்தர். சி இயக்கத்தில் கடந்த மே 3ஆம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பேய் வசூல் செய்யும் 'அரண்மனை 4'! இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக தமன்னா நடித்திருந்தார். தமன்னாவிற்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் இது கோடை விடுமுறை என்பதாலும் படத்தைக் காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படமானது எட்டு நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பேய் வசூல் செய்யும் 'அரண்மனை 4'!

சமீபகாலமாக மலையாளத் திரைப்படங்கள் மட்டுமே அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்து வந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் 2024 ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவிக்கும் முதல் படமாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ