Homeசெய்திகள்சினிமாவிஜயுடன் இணையும் அரவிந்த் சுவாமி..... 'தளபதி 68' குறித்த அப்டேட்!

விஜயுடன் இணையும் அரவிந்த் சுவாமி….. ‘தளபதி 68’ குறித்த அப்டேட்!

-

விஜயுடன் நடிகர் அரவிந்த்சாமி இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க உள்ளார். இது குறித்து அறிவிப்பை ஏற்கனவே வெளியானது. இதன் படப்பிடிப்புகள் நியூ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தளபதி 68 படத்தின் பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. விஜய் உடன் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெய் அபர்ணாதாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சுவாமியும் இந்த படத்தில் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் தளபதி 68 திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ