Homeசெய்திகள்சினிமாதிரையரங்கு கட்டணம் உயர்வா? எவ்வளவு?

திரையரங்கு கட்டணம் உயர்வா? எவ்வளவு?

-

திரையரங்கு கட்டணம் உயர்வா? எவ்வளவு?

திரையரங்கு கட்டணங்களை உயர்த்த கோரிக்கை!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறபட்டவை,

வசூல் பாதிப்பைத் தடுக்க பெரிய நடிகர்களின் படங்களை 8 வாரங்கள் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களின் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT- இல் திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில்தான் திரையிடப்பட வேண்டும். மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும், 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் நிரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதிக்க வேண்டும்.

முன்னதாக ஆபரேட்டர் உரிமம் (Operator Licence) அவசியம் என வலியுறுத்தப்பட்டது. ஆபரேட்டர் உரிமத்தை சமர்பித்த பின்னர் மட்டுமே திரையிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது ஆபரேட்டர் உரிமம் தேவையில்லை அல்லது எளிய முறையில் ஆபரேட்டர் உரிமம் தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும் , ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ (MSME) விதிபடி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.

காந்த குரல் மன்னன் எஸ்.பி.பி-யின் 4ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

மால்களில் செயல்பட்டு வரும் திரையரங்குகளில் வணிக செயல்பாடுக்கு அனுமதி வழங்கியுள்ளது போல் மற்ற திரையரங்குகளுக்கும் வணிக செயல்பாடுக்கு அனுமதி வழங்க  கோரிக்கை.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்தால் திரையரங்குகளை நஷ்டமின்றி நடத்த முடியும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ