விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவரும் நிலையில் ரசிகர்களும் அதனை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியானது. மேலும் சமீபத்தில் கூட ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் என்று வெங்கட் பிரபு ரசிகர் ஒருவருக்கு அப்டேட் கொடுத்திருந்தார். இதற்கிடையில் GOAT திரைப்படம் 2024 ஜூன் 22 விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்றால் படத்தை விடுமுறை நாட்களில் வெளியிடுவதே சிறந்தது என்று பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம். எனவே ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் படத்தை ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி GOAT படமானது பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடும் போட்டி நிலவும் காரணத்தால் GOAT படத்தை ஆகஸ்ட் 15 இல் வெளியிட சிக்கல் இருக்கிறது. அடுத்ததாக ஆயுத பூஜை விடுமுறையிலும் வெளியிட முடியாதாம். ஏனென்றால் ஜூனியர் என்டிஆர் இன் தேவரா திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்று பார்த்தால் , அந்த தேதியை ரஜினியின் வேட்டையன் திரைப்படம் குறி வைத்துள்ளது. எனவே இவ்வாறு அடுத்தடுத்த போட்டிகள் இருப்பதால் GOAT படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருப்பதாக படக்குழுவினர் வேறு எந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டு வருகின்றனராம். இருப்பினும் இடையில் ஏதாவது ஒரு நாளில் படத்தை ரிலீஸ் செய்து விடுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.