Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்திலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களா?

‘ஜெயிலர் 2’ படத்திலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களா?

-

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் எனும் திரைப்படம் வெளியானது. 'ஜெயிலர் 2' படத்திலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களா?இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதேபோல் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். அதில் தமன்னா நடனமாடிய காவலா பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பிரபலமானது. மேலும் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. 'ஜெயிலர் 2' படத்திலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களா?எனவே அடுத்ததாக நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமாரின் கதாபாத்திரங்கள் இடம்பெறும் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளியான தகவலின் படி ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் 2024 அக்டோபர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ