Homeசெய்திகள்சினிமாமம்மூட்டியின் பிரம்மயுகம்... அர்ஜூன் அசோகனின் முதல் தோற்றம் ரிலீஸ்...

மம்மூட்டியின் பிரம்மயுகம்… அர்ஜூன் அசோகனின் முதல் தோற்றம் ரிலீஸ்…

-

- Advertisement -
பிரம்மயுகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜூன் அசோகனின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான பூதகாம் படத்தின் மூலம் கவனம் பெற்ற சதாவிசம் இயக்கும் புதிய படம் பிரம்மயுகம். மம்மூட்டி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார். நைட் சிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கியது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பின்னணி வேலைகள் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. பான் இந்தியா அளவில் படம் வெளியாகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜூன் அசோகனின் முதல் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது. படக்குழு பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ