அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் உருவாகும் ஒன்ஸ் மோர் படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒன்ஸ் மோர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹேஷம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது 2025 பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மிஸ் ஒருத்தி மற்றும் இதயம் எனும் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது வா கண்ணம்மா எனும் புதிய பாடலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடல் வரிகளை பாடத்தின் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத ஹேஷம் அப்துல் வாகப் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.