அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘அநீதி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படத்தின் மூலம் வில்லனாக நடித்து பிரபலமானவர். அதைத்தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இவருக்கு திரைத்துறையில் பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இவர் தமிழில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
இவ்வாறு வில்லனாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ் தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தகாரம்’ திரைப்படத்திற்கு பிறகு ‘அநீதி’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை அங்காடித்தெரு வெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தை வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனமும் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.