Homeசெய்திகள்சினிமாமுகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்.... வெளியானது அநீதி பட டீசர்!

முகத்தில் ரத்த காயங்களுடன் கொலை வெறியில் அர்ஜுன் தாஸ்…. வெளியானது அநீதி பட டீசர்!

-

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கைதி மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் இவர் கதாநாயகனாக அநீதி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தை வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார். படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், பரணி, காளி வெங்கட், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை வசந்த பாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனமும் இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள அநீதி திரைப்படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் அர்ஜுன் தாஸ் முகத்தில் ரத்த காயங்களுடன் கையில் கோடாரியுடன் கொலை வெறியில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ