நடிகர் அர்ஜுன் தாஸ் ‘விடாமுயற்சி‘ படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
துணிவு படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக ‘விடா முயற்சி‘ படத்தில் நடிக்க இருக்கிறார். மீகாமன், தடம், தடையறத் தாக்க, கலகத் தலைவன், உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்குகிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..
இந்தப் படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் விடாமுயற்சி படத்தில் வில்லனாக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. கைதி படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக கலக்கியிருந்தார். தற்போது விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் துணை வில்லனாகவும் வேறு ஒரு பிரபல நடிகர் ஒருவர் முக்கிய வில்லனாக இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.