அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஒன்ஸ் மோர் படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் தாஸ். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் வெளியிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்த இரண்டு படங்களையும் இவர் வில்லனாக நடித்திருந்தாலும் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரசவாதி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். இதற்கிடையில் இவர், ஒன்ஸ் மோர் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஹேஷம் அப்துல் வாகப் இதற்கு இசையமைக்க அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் 2025 பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் நிறைவடைந்த பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
“Idhayam” – The mellifluous melody of #OnceMore Releases Tomorrow ❤️💙✨
A Cute Glimpse at 5pm today !!Written & Directed by @isrikanthmv 🎬
A @HeshamAWmusic musical 🎶 @iam_arjundas @AditiShankarofl @editorNash @Foxy_here03 @Yuvrajganesan @MillionOffl @proyuvraaj pic.twitter.com/7jU8w1ngLr— Million Dollar Studios (@MillionOffl) November 15, 2024
இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து மிஸ் ஒருத்தி எனும் பாடல் வெளியான நிலையில் நாளை (நவம்பர் 16) இதயம் எனும் புதிய பாடல் வெளியாக இருக்கிறது. அதேசமயம் இன்று (நவம்பர் 15) இதயம் பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.