Homeசெய்திகள்சினிமாதனுஷுக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுன்..... எந்த படத்தில் தெரியுமா?

தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுன்….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் அர்ஜுன், தனுஷுக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுன்..... எந்த படத்தில் தெரியுமா?நடிகர் தனுஷ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இட்லி கடை எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்துள்ளார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தையும், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதற்கிடையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் தனுஷ் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். அதன்படி தனுஷின் லைன் அப்பில் எக்கச்சக்கமான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் ஒன்றுதான் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம்.

அதாவது சரத்குமார், அசோக்செல்வன் ஆகியோரின் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு போர் தொழில் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் அர்ஜுன்..... எந்த படத்தில் தெரியுமா?எனவே இதைத்தொடர்ந்து விக்னேஷ் ராஜா, தனுஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீபகாலமாக தொடர்ந்து பல செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருக்கிறார் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. ஏற்கனவே நடிகர் அர்ஜுன், கடல், இரும்புத்திரை, விடாமுயற்சி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது இவர், தனுஷுக்கு வில்லனாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ