பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் ஆடு ஜீவிதம், விலயாத் புத்தா போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் ஆடு ஜீவிதம். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
Celebrity Alert!!! We have https://t.co/fZNkKAaVU0 Rahman onboard…!!!🤩🤩#kochimetro#kochi#arrahman@arrahman pic.twitter.com/1a9F5ulpcj
— Kochi Metro Rail (@MetroRailKochi) February 27, 2024