நடிகர் அருள்நிதி கலெக்டராக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மௌனகுரு, டிமான்ட்டி காலனி, டைரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. கடைசியாக இவர் டிமான்ட்டி காலனி 2 எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களில் கமிட்டாகி வரும் அருள்நிதி பம்பர் படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேன் எனும் நல்ல ஒரு பீல் குட் படத்தை இயக்கியிருந்த கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி கலெக்டராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தேன் படத்தை போல் நல்ல ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் அரசியல் நையாண்டி இருக்கும் என்றும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.