Homeசெய்திகள்சினிமாமுத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்.... டைட்டில் இதுதானா?

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்…. டைட்டில் இதுதானா?

-

- Advertisement -

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்.... டைட்டில் இதுதானா?தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. அந்த வகையில் இவர் மௌனகுரு, டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடந்தாண்டி இவரது நடிப்பில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவர், பம்பர் படத்தில் இயக்குனர் எம் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் பிசியாக நடித்து வரும் அருள்நிதி, கொம்பன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்திலும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது இந்த படம் தொடர்பான கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் ஹரிஷ் பேரடி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம்.... டைட்டில் இதுதானா? ஏற்கனவே பிருந்தாவனம் திரைப்படத்தில் அருள்நிதி, தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதற்கு ‘ராம்போ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ