Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய், பாலா கூட்டணியின் 'வணங்கான்'...... டீசர் குறித்த அப்டேட்!

அருண் விஜய், பாலா கூட்டணியின் ‘வணங்கான்’…… டீசர் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியானது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அருண் விஜய், பாலா கூட்டணியின் 'வணங்கான்'...... டீசர் குறித்த அப்டேட்!

இதற்கிடையில் நடிகர் அருண் விஜய், பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து சமுத்திரக்கனி, மிஸ்கின், மமிதா பைஜூ, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதேசமயம் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.அருண் விஜய், பாலா கூட்டணியின் 'வணங்கான்'...... டீசர் குறித்த அப்டேட்! இந்நிலையில் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். எனவே விரைவில் வணங்கான் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ