Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்.... வெளியான புதிய தகவல்!

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்…. வெளியான புதிய தகவல்!

-

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்.... வெளியான புதிய தகவல்!ஏற்கனவே இவர் பாடல் ஆசிரியர் என்பதும் பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி ஆகியோரின் நடிப்பில் பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் வெளியாகி இருந்த இந்த படமும் நடிகர் தனுஷிற்கு சிறந்த இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது. மேலும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படமும் உருவாகி இருக்கிறது. இதன் பிறகும் நடிகர் தனுஷ் தொடர்ந்து பல படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரகாஷ்ராஜ் மற்றும் நித்யாமேனன் நடிப்பில் புதிய படம் ஒன்றை நடிகர் தனுஷ் இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்திருந்தது. தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய்.... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் மேலும் ஒரு கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் தனுஷ் இயக்கு உள்ள மற்றுமொரு புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் அருண் விஜய், மிஷன் சாப்டர் 1 படத்திற்குப் பிறகு வணங்கான் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அத்துடன் ரெட்ட தல எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ