Homeசெய்திகள்சினிமாஅஜித் மிகவும் துணிச்சலான மனிதர்..... ரேஸிங் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து அருண் விஜய்!

அஜித் மிகவும் துணிச்சலான மனிதர்….. ரேஸிங் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து அருண் விஜய்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தையும் 63வது திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படத்தையும் முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார். அஜித் மிகவும் துணிச்சலான மனிதர்..... ரேஸிங் பயிற்சியில் ஏற்பட்ட விபத்து குறித்து அருண் விஜய்!விரைவில் தொடங்க உள்ள ரேஸிங்கில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு அஜித் ரேஸிங்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சராசரவென சுழன்று நின்ற வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் கொலை நடுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகர் அஜித்துக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், “அஜித் சார் கவனமாக இருங்கள். தங்கள் அனைவரும் உங்களை மிகவும் நேசிக்கிறோம். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதே சமயம் வணங்கான் படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் விஜய், “அஜித் மிகவும் துணிச்சலான மனிதர். ரேஸிங் பயிற்சியின் போது அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவிற்கு போன் செய்து அவர் நலமுடன் இருக்கிறாரா? என்று விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார் என்று மேலாளரும் சொன்னார். மேலும் அஜித் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வராதது தனக்கு வருத்தம் தருவதாகவும் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

MUST READ