Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய் நடிப்பில் உருவாகும் 'மிஷன்'..... டிரைலர் குறித்த அறிவிப்பு!

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘மிஷன்’….. டிரைலர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

அருண் விஜய் நடிப்பில் உருவாகும் 'மிஷன்'..... டிரைலர் குறித்த அறிவிப்பு!நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் தடம், தடையற தாக்க, குற்றம் 23 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது அருண் விஜய் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

அதே சமயம் அருண் விஜய், பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து நிஷா சஜயன், எமி ஜாக்சன், அபி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது.

மேலும் இந்த படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பை ஏற்கனவே பட குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ