வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அருண் விஜய், சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அருண் விஜய் தற்போது ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் அருண் விஜய், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஷாம். சி.எஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 18) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அருண் விஜய், நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தார். “வணங்கான் படம் என் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகும். வணங்கான் பட வாய்ப்பு எனக்கு கிடைத்ததும் சூர்யா சாருக்கு போன் செய்தேன். மேலும் எனக்காக மகிழ்ச்சியாக இருந்த முதல் நபர் அவர்தான். உங்களுடைய கிரீன் சிக்னலுக்கு மிக்க நன்றி சூர்யா சார்” என்று பேசினார் அருண் விஜய்.
பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் நடித்து வந்தார். பின்னர் ஒரு சில காரணங்களினால் நடிகர் சூர்யா அந்தப் படத்திலிருந்து விலக அவருக்கு பதிலாக இயக்குனர் பாலா அருண் விஜயை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.