நடிகர் அருண் விஜய் தனுஷ் குறித்து பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் தற்போது ரெட்ட தல திரைப்படம் உருவாகியுள்ளது. பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தடம் படத்திற்கு பிறகு இவர் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்துள்ளது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த படத்தில் நடிகர் தனுஷ் மெலோடி பாடல் ஒன்றை பாடியிருப்பதாக படக்குழு அறிவித்தது. இது தொடர்பாக நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ரெட்டை தல படத்தில் தனுஷ் பாடியுள்ள பாடலை நீங்கள் கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பாடல் அனைவரையும் மயக்கும் என்று நம்புகிறேன். தனுஷிற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.