அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி அருண் விஜய் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார். அருண் விஜயின் 36-வது படமான இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி அத்னானி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். இதனை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.